தமிழின வாக்காளப் பெருமக்களே..
மலேசியத் தமிழர்கள் நிலை எப்பொழுதும் பரிவிற்கு இடமானதாய் இருப்பினும், 4 வருடங்களுக்கு ஒரு முறை வரும் தேர்தல் நம் இனத்தின் முக்கியத்துவத்தை வெளிக்கொணர்வதாய் அமைகின்றது. இந்நிலை நீடிக்கும் என்பது முயல் கொம்பு என்ற போதிலும் இம்முறை நமக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பினைத் தவர விடுதல் நன்மையன்று.
அறிவாளி மற்றும் படித்தத் தமிழர்கள் எங்கும் பிழைத்துக் கொள்வர் என்று இருந்தாலும், தோட்டப்புரத்திலும் பட்டனத்திலும் வாழும் நம் இன பாமரர்களுக்கும் முன்னேர வகை செய்தல் வேண்டும்.
இதற்கு அடிப்படையில் நம் தமிழினம் சரியான தலைவர்களைத் தேர்வு செய்தல் மிக அவசியம். தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ளன. தேர்தல் பிரச்சாரக் கூட்டத்திற்கு போகையில் தெளிவான சிந்தனையுடன் செல்வோம். விலை மதிப்பே இல்லாத பரிசு பொட்டலங்களையும், இல்லவச உணவையும் எதிர்பார்த்துப் போக வேண்டாம்.
அங்கு சென்றும் நண்பர்களோடு கதை பேசிக்கொண்டிருப்போமேயானால், ஆளும் கட்சியோ அல்லது எதிர் கட்சியோ நமக்கு என்ன திட்டங்கள் வைத்திருக்கின்றனர் என்பது விளங்காது.
"RAKYAT DIDAHULUKAN" (மலேசிய குடிமக்களுக்கே முதன்மைத்துவம்) எனும் கொள்கை நம் பிரதமரிடம் இருந்து வந்ததாக இருந்தாலும், அவரை நமக்கு பிடிக்காத சூழ்நிலை இருந்தாலும், வாக்களிக்கும் பொழுது எக்கட்சி நமக்கு அதிகப் பயன் அளிக்கின்றது என்று எண்ணிப் பார்தல் மிக அவசியம்.
தமிழின வேற்பாளர்களைக் கொண்டிருக்கும் தொகுதிகளின் வாக்காளர்கள் முழுமூச்சாக வேற்பாளர்கள் எக்கட்சியில் இருப்பினும் அவர்களுக்கு வாக்களித்தல் அவசியம். இது ஏனெனில், பல்லின மக்களைக் கொண்ட மலேசிய நாட்டில் நம் இனத்தவர் உதவி என்று நாடுகையில் தமிழின வேற்பாளர்களே நமக்கு உதவி செய்ய இயலும் என்பதனைத் தெளிதல் வேண்டும்.
மேலும், சற்றே நம் நாட்டின் அரசியல் கட்சிகளின் பின்னனியை ஆய்வு செய்வோம். இதில் அரசியல் தலைவர்களின் பின்னனி அடங்காது. இதனில் தான் நாம் சற்றே மாற்றிச் சிந்தித்தல் அவசியம். எக்கட்சியில் கண்டிப்பாக நமக்கு அரசாங்கத்திடம் இருந்து உதவி கிடைக்க வழி உண்டு என்பதனைச் சிந்திக்கத் தவரக்கூடாது. கண்டிப்பாக சட்டச் சபையில் ஒரு தனிமனிதராய் இருந்து ஒருவர் நம்முடைய அனைத்துத் தேவைகளையும் பெற்றுத் தருதல் என்பது கடினம்.
எந்த ஒரு தேர்தல் பிரச்சாரத்திற்குச் சென்றாலும் அவர்கள் சொல்வதில் உண்மை காணுங்கள். ஒரு 3 மணி நேரக் கூட்டத்தில் 20-தே நிமிடங்கள் தேசிய மொழியிலோ அல்லது ஆங்கில மொழியிலோ உரை நிகழ்ந்ததேயானால், அதன் மூலம் உங்கள் முக்கியத்துவத்தைப் புரிந்துக் கொள்ளுங்கள்.
இறுதியாக, நம் வாக்கிற்கு விலையோ, பொருளோ, அழைச்சலோ மதிப்பு அன்று. நாம் பெரும் நன்மை, நம் எதிர்காலத் தலையெழுத்தில் மாற்றம் மட்டுமே நாம் வாக்களித்ததின் பயன்/விலை/மதிப்பு என்பதனைப் புரிந்துக் கொள்வோம்.
முதல் கட்டமாக நம் இடத்தையும் எண்ணிக்கையும் தக்க வைத்துக் கொள்வோம். பின்னர் அரசியல் மற்றும் அரசியல் தலைவர்களிடம் மாற்றம் வேண்டுவோம்.
No comments:
Post a Comment